கரோனா தடுப்பூசி அதிகம் செலுத்திய நாடுகள், கண்டம்: புள்ளிவிவரம் கூறும் உண்மை

By செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுகின்றன. அந்த வகையில் தொற்றிலிருந்து காத்துக் கொள்ளவும், கரோனாவின் அடுத்தடுத்த அலைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் உலக நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மக்கள்தொகையின் அடிப்படைகள் அதிக அளவில் கரோனா தடுப்பூசியை செலுத்திய முதல் நாடுகளின் விவரத்தை’ our world in data’ என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

அதில் 40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சீனா முதலிடத்திலும், 27 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

18 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. பிரிட்டன் மற்றும் பிரேசில் நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன.


மக்கள் தொகை அல்லாது கரோனா தடுப்பூசியை செலுத்திய சதவீத அடிப்படையில் எடுத்துக் கொண்டால், இஸ்ரேல் முதலிடத்திலும், மங்கோலியா இரண்டாம் இடமும், பிரிட்டன் முன்றாம் இடமும் உள்ளன. பஹ்ரைன், ஹங்கேரி ஆகிய நாடுகள் நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளன.

கண்டங்களின் அடிப்படையில்:

இதுவரை ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 50% பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் இதுவரை 21.58% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் 19.6% பேருக்கும், தென் அமெரிக்காவில் 6.36% பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் இதுவரை வெறும் 1.66% பேருக்குதான் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஓசினியா கண்டத்தில் 0.26 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்