உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் ஈடுபடும் சீனா: அமெரிக்கா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் சீனா ஈடுபட்டுள்ளது என்று அமெரிக்க நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில், “உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா இன அழிப்பில் ஈடுபடுகிறது. அதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளது.

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில்தான் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். சீனாவின் மற்ற மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை.

இதனால் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள், சிறுபான்மைப் பிரிவினர் இடையே குழந்தைப் பேற்றைத் தடுக்க அத்துமீறும் செயல்களில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அசோசியேட் பிரஸ் (ஏ.பி.) செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் தெரியவந்தது. இது தொடர்பான செய்தியை ஜூலை மாதம் வெளியிட்டது. இந்த நிலையில் அமெரிக்க நிபுணர் குழுவும் இத்தகைய குற்றச்சாட்டை வைத்துள்ளாது. ஆனால், இதனை சீனா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

வர்த்தக உலகம்

14 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்