ஸ்புட்னிக், மாடர்னா கரோனா தடுப்பு மருந்து; வியட்நாம் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

வியட்நாமின் ஸ்புட்னிக் , மாடர்னா ஆகிய மருந்துகளை கரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்த அ ந் நாட்டு அரசு சுகாதாரத் துறை பரிந்துரைந்துள்ளது.

இதுகுறித்து வியட்நாம் சுகாதாரத் துறை தரப்பில், “ வியட்னாமில் கரோனா தொற்றுக்கு எதிராக ஸ்புட்னிக், மாடர்னா தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதிக்கிறோம். சுமார் 150 டோசஸ் கரோனா தடுப்பு மருந்துகளை முதல் கட்டமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கரோனா வைரஸ்

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.

மாடர்னா, பைஸர், ஜான்சன் & ஜான்சன் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

14 mins ago

சினிமா

17 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

15 mins ago

சினிமா

33 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

27 mins ago

சினிமா

38 mins ago

சினிமா

41 mins ago

வலைஞர் பக்கம்

45 mins ago

சினிமா

50 mins ago

மேலும்