சவுதி ராணுவத்தில் பெண்கள்: இன்று முதல் சேர்க்கை ஆரம்பம்

By செய்திப்பிரிவு

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் இணைவதற்கான சேர்க்கை இன்று முதல் துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி பாதுகாப்புத்துறை அமைச்சகம் தரப்பில், “ சவுதி அரேபியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ராணுவத்தில் பெண்கள் சேருவதற்கான அனுமதி துவங்குகிறது. ஆண்களுக்கான சேர்க்கையும் தொடங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய ராணுவத்தில் பெண்களை சேர்க்க முடிவு கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதற்கான சேர்க்கையை சவுதி ராணுவம் ஆரம்பித்துள்ளது. இதை வரவேற்று சவுதி பெண்கள் நல ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டில் உள்ள பெண்கள் உரிமைக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

பெண்கள் கார் ஓட்ட அனுமதி மற்றும் ஆண்களின் பாதுகாப்பு இல்லாமல் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி ஆகிய மாற்றங்களை கொண்டு வந்தனர். இந்த நடவடிக்கைகளை சவுதி பெண்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

கச்சா எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தையே பெரிதும் நம்பியிருக்க வேண்டிய சூழலுக்கு மாற்றாகவும் பொருளாதாரத்தை விரிவுசெய்யும் நோக்கிலும் பெண்கள் பொருள் ஈட்டும் வாய்ப்பு ஏற்படுத்தும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. மேலும், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும் அறிவித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

வலைஞர் பக்கம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

49 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்