லஞ்ச வழக்கில் சாம்சங் துணைத் தலைவர் ஜேய் ஒய் லீக்கு 30 மாத சிறை

By செய்திப்பிரிவு

தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் குன் ஹைக்கு சாம்சங் துணைத் தலைவர் ஜேய் ஒய் லீ லஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 2017-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து மேல்முறையீடு செய்ததன் மூலம் இவருடைய தண்டனை ரத்து செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் வழக்கை உச்ச நீதிமன்றம் சியோல் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியது. சியோல் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.

தென் கொரிய சட்டப்படி 3 ஆண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனைகள் மட்டுமே ரத்து செய்யப்படவோ குறைக் கப்படவோ வாய்ப்புள்ளது. அதற்கு அதிகமாக இருந்தால் தண்டனையை அனுபவித்தாக வேண்டும். எனவே, லீக்கு மீண்டும் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஓராண்டு சிறையில் இருந்ததால் இரண்டரை ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் நிறுவனத் தலைவரும் லீயின் தந்தையுமான லீ குன் ஹீ காலமானார். அவருடைய பொறுப்புகளைக் கைப்பற்ற இருந்த நிலையில் இவருக்கு இந்த சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சுற்றுச்சூழல்

26 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்