புறப்பட்ட 4 நிமிடங்களில் மாயமான இந்தோனேசிய விமானம்: தேடுதல் பணி தொடக்கம்

By ஏஎன்ஐ

இந்தோனேசியா ஸ்ரீவிஜயா ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் ரக விமானம் ஒன்று ஜகார்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 4-வது நிமிடத்திலேயே மாயமானது. இதனையடுத்து விமானத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஸ்ரீவிஜயா விமான நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் எண் 182 தலைநகர் ஜகார்தாவில் உள்ள சோகர்னோ ஹட்டா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

விமானம் 10,000 அடி உயரத்தில் பறந்தபோது விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. சரியாக காலை 7.40 மணிக்கு விமானம் மாயமானதாகக் கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது தெரியவில்லை. மேலும், இந்த விமானம் 26 வருடங்கள் பழமையானது என்றும் கூறப்படுகிறது.

விலகாத மாயம்:

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து MH370 மலேசிய ஏர்லைன்ஸிற்குச் சொந்தமான விமானம் ஒன்று சீனத் தலைநகர் பீஜிங்கை நோக்கிப் பறந்தது.

போயிங் 777-200 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமானப் பணியாளர்கள் பயணித்தனர். மாயமான அந்த விமானத்தின் நிலை இன்னும் தெரியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

சினிமா

34 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்