150 கோடி ஆண்டுகளுக்கு முன் புவியின் உள்மையப்பகுதி தோற்றம்

By ஐஏஎன்எஸ்

புவி உள்மையப்பகுதி 100 - 150 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி யிருக்க வேண்டும் என லிவர்பூல் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

புவியின் உள்மையப்பகுதி (இன்னர்கோர்), அதன் புறத்தே அமைந்த திரவ உள்மையப்பகுதி என இரு அடுக்குகளாக உள்ளது. இரும்பால் ஆன திட உட்கருவம் புளூட்டோ கிரகத்தை விட பெரியதாகும். இதன் புறப்பகுதி உருகிய இரும்பால் ஆனது.

உட்கருவம் எத்தனை ஆண்டு களுக்கு முன் உருவாகியிருக்கக் கூடும் என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

லிவர்பூல் பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 100-150 கோடி ஆண்டுகளுக்கு முன் இது உருவாகியிருக்க வேண்டும் என மதிப்பிட்டுள்ளனர்.

“இக்கண்டுபிடிப்பு புவியின் உள்ளமைவு மற்றும் வரலாறு குறித்த நமது புரிதல்களை மாற்றிய மைக்கும். நாம் முன்பு கணித்ததை விட புவியின் கருவம் மிக மெது வாக குளிர்ந்து வருகிறது. இது ஒட்டுமொத்த புவி அறிவியலிலும் விளைவை ஏற்படுத்தும்” என இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் ஆண்டி பிக்கின் தெரிவித்துள்ளார். பழமையான தீப்பாறை (இக்னீயஸ்) களை ஆய்வு செய்து இம்முடிவுக்கு வந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்