உலகின் முதல் நாடுகளாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது: மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

உலகின் முதல் நாடுகளாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 2021-ம் ஆண்டு பிறந்தது. மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாகப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.

உலகின் நேரக்கணக்கின்படி நியூசிலாந்தில்தான் முதல் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது.

பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைக் கூறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும், இவ்வருடம் கரோனா தொற்று நீங்கி மக்கள் முற்றிலும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று தங்கள் வேண்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

கரோனாவிலிருந்து முழுவதுமாக விடுபட்டுள்ள நியூசிலாந்தில் ஒருசில கட்டுப்பாடுகளுடன் மக்கள் புத்தாண்டு கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் சிட்னி துறைமுகத்தில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.


அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவலையொட்டி புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்