அடுத்த தலாய் லாமா நியமன விவகாரம்: சீனாவின் தலையீட்டை தடுக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

திபெத் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால் சீனாவுக்கு எதிராக புத்த மதத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திபெத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கவும், சீனாவின் எந்த தலையீடும் இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை திபெத் புத்த மதத்தினர் சுதந்திரமாக தேர்ந்தெடுக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெறும்சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்நேற்றுமுன்தினம் கையெழுத் திட்டார். ‘திபெத் கொள்கை மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2020’ என்று பெயரிடப்பட்டுள்ள மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

சீனாவின் கடும் எதிர்ப்புக்கு இடையில் இந்த மசோதாவுக்கு கடந்த வாரம் அமெரிக்க செனட் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சட்டத்தின் கீழ், திபெத்தில் அமெரிக்க தூதரகம் ஏற்படுத்தும் வரையில், அமெரிக்காவில் சீனா புதிதாக தூதரகம் திறப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

கருத்துப் பேழை

12 mins ago

சுற்றுலா

49 mins ago

சினிமா

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்