சமூக ஆர்வலர் சமிரா பலூச் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை: கனடா போலீஸார் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

பாகிஸ்தான் ராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த பலுசிஸ்தானைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கரிமா பலூச் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கனடா போளீஸார் தெரிவித்துள்ளனர்.

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அடக்குமுறைகளுக்கு எதிராக அம்மாகாணத் தலைவர்கள் பலரும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். பாகிஸ்தானிடமிருந்து தங்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என பலுசிஸ்தானின் பிரிவினைவாதிகள் பலரும் அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பலுசிஸ்தான் ஆதரவு சமூக ஆர்வலரான கரிமா பலூச், பலுசிஸ்தானில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் கொடுத்து வந்தார். இதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு பிபிசி வெளியிட்ட சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானிலிருந்து வெளியேறி கனடாவில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கரிமா பலூச் மர்மான முறையில் மரணமடைந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களாக கரிமா மாயமான நிலையில், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சமிரா பலூச் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று கனடா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கனடா போலீஸார் தரப்பில், “ சமிராவின் மரணத்தின் பின்னணியை அறிய அனைவரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். திங்கட்கிழமையன்று சமிரா மரணமடைந்திருக்கிறார். விசாரணையில் சமிராவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. எந்த குற்றச் சம்பமும் நடைபெறவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

21 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்