ஊரடங்கு: இங்கிலாந்து கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் 

By செய்திப்பிரிவு

புதிய வகை கரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு அத்தியாவசியக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகப் பல்வேறு தளர்வுகளை பிரிட்டன் அரசு அறிவித்திருந்த நிலையில், புதிய வகை கரோனா வைரஸ் பரவலையடுத்து, அந்தத் தளர்வுகளை ரத்து செய்துள்ளது.

இதற்கு முன்புவரை 3-வது படிநிலைக் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு முதல் 4-வது படிநிலை ஊரடங்கைக் கடுமையாக அமல்படுத்தியுள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

புதிய வகை கரோனா வைரஸ், ஏற்கெனவே இருக்கும் கரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரிட்டனுக்கான விமானச் சேவையை 40க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், கடைகளில் பொருட்கள் வாங்க இங்கிலாந்து மக்கள் குவிந்து வருகின்றனர்.

பல இடங்களில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்து வருகின்றன. இதன் காரணமாக மக்கள் கவலை அடைந்துள்ளதாகவும், இதற்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்து வருவதல் #PanicShopping, #lettuce போன்ற ஹேஷ்டேகுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 mins ago

உலகம்

52 mins ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்