அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 2,50,000 பேர் கரோனாவால் பாதிப்பு

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,49,709 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,49,709 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும். மேலும் நேற்று மட்டும் 2,814 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர்தான் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. மேலும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸும் நேற்று கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

விளையாட்டு

27 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

53 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

51 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்