வேற்றுகிரக வாசிகள் அமெரிக்காவுடன் தொடர்பில் உள்ளனர்; ட்ரம்ப்புக்குத் தெரியும்: இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் கருத்து

By செய்திப்பிரிவு

வேற்றுகிரக வாசிகள் இருப்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்குத் தெரியும் என்று இஸ்ரேல் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் ஹைம் இஷத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹைம் இஷத் கூறும்போது, “வேற்றுகிரக வாசிகள் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தொடர்பில் உள்ளனர். இருப்பினும் வேற்றுகிரக வாசிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உள்ளனர். ஏனென்றால் மனிதர்கள் தங்களுக்கு இணையாக விண்வெளியை அறிவதற்கு இன்னும் தயாராக இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். வேற்றுகிரக வாசிகள் இருப்பது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நன்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஹைம் இஷத் இத்தகவலை இஸ்ரேலின் முக்கியமான நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், இக்கருத்து குறித்து அமெரிக்கா தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

வேற்றுகிரக வாசிகள்:

பூமியில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர். அதே நேரத்தில் வேற்றுகிரகங்களில் மனித உயிர்கள் போன்று வேறு உயிரினங்களும் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துப் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் வேற்றுகிரக வாசிகளின் வாழ்க்கை நிலை குறித்து அறிவதில் மனிதர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேற்றுகிரக வாசிகள் என்று யாராவது இருக்கிறார்களா என்பது குறித்து தெளிவான ஆராய்ச்சி நம்மிடையே இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் இது தொடர்பாக அய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 secs ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்