தென்கொரியாவில் கரோனா அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

தென் கொரியாவில் மார்ச் மாதத்திற்குப் பிறகு அதிகபட்சமாக ஒரே நாளில் 583 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறை தரப்பில், “ தென் கொரியாவில் மார்ச் மாதத்திற்குப் பிறகு அதிகபட்சமாக ஒரே நாளில் 583 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே 500க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உடற்பயிற்சி நிலையங்கள், பள்ளிகள் திறந்ததன் விளைவாக கரோனா மீண்டும் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாகவும், வீட்டிலிருந்தே பணிபுரிய மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் தென்கொரியாவில் இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டது.

இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்கொரியாவில் அதற்கு முன்னரே தொடங்கியது.

உலகம் முழுவதும் சுமார் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

28 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்