ஜெர்மனியில் 10 லட்சத்தை நெருங்குகிறது கரோனா

By செய்திப்பிரிவு

ஜெர்மனியில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 13,554 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெர்மனியில் உள்ள ராபர்ட் கோட் மருத்துவமனை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,554 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,42,687 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஜெர்மனியில் 14,361 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் வாரங்களில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இருக்க வேண்டும் என்றும், ஜெர்மனி மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் அழைப்பு விடுத்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சினிமா

24 mins ago

சினிமா

27 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

25 mins ago

சினிமா

43 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

37 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

51 mins ago

வலைஞர் பக்கம்

55 mins ago

சினிமா

1 hour ago

மேலும்