புதிய சிலை திறந்து காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறது லிதுவேனியா

By பிடிஐ

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி மற்றும் அவரின் நெருங்கிய சகாவும் சிற்பியுமான ஹெர்மன் காலென்பெக் ஆகியோரின் சிலை களைத் திறந்து காந்தி ஜெயந்தி யைக் கொண்டாட ஐரோப்பிய நாடான லிதுவேனியா முடிவு செய் துள்ளது.

ஜெர்மன்-யூத சிற்பியான காலென்பெக் காந்தி தென்னாப் பிரிக்காவில் தங்கியிருந்தபோது அவருடன் நெருக்கமாக பழகி உடன் பணியாற்றியவர். டிரான்ல்வாலில் இருந்த தனது 1,000 ஏக்கர் நிலத்தை தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களுக்கான டால்ஸ்டாய் பண்ணை அமைக்க தானமாக அளித்தவர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாத்மா காந்தி மற்றும் காலென்பெக் ஆகியோர் அருகருகே நிற்கும் விதத்திலான வெண்கல உருவச் சிலையை திறந்து வைக்க லிதுவேனிய அரசு முடிவு செய்துள்ளது. காலென் பெக்கின் பிறந்த ஊரானா ருஸ்னே நகரில் அமையவுள்ள இந்த சிலைகளை லிதுவேனிய பிரதமர் அல்கிர்தாஸ் பட்கெவிசியஸ், இந்திய வேளாண்மைத் துறை அமைச்சர் மோகன்பாய் குண்டா ரியா ஆகியோர் திறந்து வைக்கவுள்ளனர்.

காந்தியுடன் இந்தியாவில் இணைந்து செயல்பட 1914-ல் காலென்பெக் விரும்பினார். ஆனால் முதல் உலகப்போரின் போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1945-ம் ஆண்டு உயிரி ழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

41 mins ago

இந்தியா

52 mins ago

சினிமா

53 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்