அமெரிக்க அதிபராக ஜோ பைடன் வெற்றி: நேரலையில் அழுத சிஎன்என் செய்தியாளர்

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டி.வி. நேரலை நிகழ்ச்சியில் சிஎன்என் செய்தித் தொலைக்
காட்சி செய்தியாளர் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. 4 நாள் இழுபறிக்குப் பின்னர் நேற்று முன்தினம் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி அமெரிக்காவின் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது சிஎன்என் தொலைக்காட்சி செய்தியாளர் கபேல் வேன்
ஜோன்ஸ், கண்ணீர் விட்டு அழுதது கேமராக்களில் பதிவானது. அவர்தான் சிஎன்என் சார்பாக நேரலை நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டு இருந்தார்.

அதிபராக ஜோ பைடன் வெற்றி பெறவேண்டும் என்று அமெரிக்காவில் பல கோடி மக்கள் பிரார்த்தனை செய்தனர். அந்த பிரார்த்தனையின் விளைவாகதான் அதிபர் பைடன் வெற்றி பெற்றார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கபேல் வேன் ஜோன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “பைடன் வெற்றி பெறவேண்டும் என்று பலரும் விரும்பினர். முந்தைய ஆட்சியில் பலரும் பாதிக்கப்பட்டிருந்தனர். அதற்கு பழிவாங்கும் படலம்தான் இந்த தேர்தல் வெற்றி. என்னால் மூச்சுவிடக் கூட முடியவில்லை. இது அமெரிக்காவுக்கு நல்ல நாளாக அமைந்தது. தேர்தலில் தோல்வி கண்ட மற்றவர்களுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். துணை அதிபராக வெற்றி பெற்ற கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

கபேல் வேன் ஜோன்ஸ் கண்ணீர்விட்டு அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு கருப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடைெபற்றன. இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள், போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் பைடன் வெற்றி பெற்றதால் அவர் கண்ணீர் விட்டு அழுததாக கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்