இங்கிலாந்தில் அதிகரிக்கும் கரோனா: ஐரோப்பாவில் ஒரு கோடியைக் கடந்தது

By செய்திப்பிரிவு

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,254 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,254 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,34,914 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததையடுத்து, பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மீண்டும் ஊரடங்கை அறிவித்தார்.

இந்த ஊரடங்கு உத்தரவு நவம்பர் 5-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தது. உயிரிழப்பும் நூற்றுக்கணக்கில் உயர்ந்தது. இதையடுத்து, பிரிட்டனில் மீண்டும் கரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பா: ஒரு கோடியை கடந்த கரோனா வைரஸ்

ஐரோப்பாவில் கடந்த 5 வாரத்தில் கரோனா பாதிப்பு 5 மடங்காகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்