பிரான்ஸ், ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு

By செய்திப்பிரிவு

பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கரோனா பரவலின் இரண்டாம் கட்டத்தைச் சந்தித்து வருகின்றன.

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கூறும்போது, “கரோனா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. முதல் கட்டக் கரோனா பரவலை விட இரண்டாம் கட்டம் கடுமையானதாக இருக்கும். எனவே நமது அண்டை நாடுகளைப் போல நாமும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியிலும் வரும் நவம்பர் இரண்டாம் தேதி முதல் திரையரங்குள், உணவகங்கள் ஆகியவை மூடப்பட உள்ளன. இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, “நாம் சவாலை எதிர் கொண்டுள்ளோம். ஊரடங்கு உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகள் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென்கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்