ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 15 லட்சத்தை நெருங்குகிறது

By செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,340 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்குகிறது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 17,340 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,97,167 ஆக அதிகரித்துள்ளது. மாஸ்கோவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளன.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவித்தது.

ஆனால், ரஷ்யாவின் தடுப்பு மருந்து இன்னும் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள இரண்டாவது கரோனா தடுப்பு மருந்துக்கு அதிபர் புதின் அனுமதி அளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

25 mins ago

சுற்றுச்சூழல்

35 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

30 mins ago

விளையாட்டு

51 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்