கரோனா பரவல்: இலங்கையில் மூடப்பட்ட மீன் சந்தை

By செய்திப்பிரிவு

இலங்கையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு முக்கியமான மீன் சந்தை மூடப்பட்டது. மேலும் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டன.

இதுகுறித்து இலங்கை அரசு தரப்பில், “ இலங்கையின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

மேலும் இலங்கையில் அமைந்துள்ள பெரிய மீன் சந்தையில் விற்பனையாளர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் மீன் சந்தை தற்போது மூடப்பட்டுள்ளது. கரோனா பரவலின் மையமாக இந்த மீன் சந்தை தற்போது மாறியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கரோனா அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள், முக்கிய அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை மறைப்பவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் இலங்கை அரசு முன்னரே தெரிவித்திருந்தது.

இலங்கையில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 13 பேர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்