ஜோ பிடன் ஒரு பேரழிவு: ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ஒரு பேரழிவு என்றும், ஊழல் மிக்கவர் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் இதுகுறித்து ட்ரம்ப் பேசும்போது, “ஜோ பிடன் ஒரு பேரழிவு. அவர் ஊழலின் உருவகமாக உள்ளார். அவர் நாட்டிற்காக என்ன செய்தார். அவர் ஊழல் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜோ பிடன் உங்கள் வேலை வாய்ப்புகளைப் பிடுங்கி விடுவார். உங்கள் கம்பெனிகளை மூடிவிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என்று ட்ரம்ப் விமர்சித்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்குவதற்கு சில நாட்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்