ஜோ பிடன் அதிபராக தேர்ந்தெடுப்பட்டால் சீனா மீதான வரியை நீக்குவார்: ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேந்தெடுக்கப்பட்டால் அவர் சீனா மீதான வர்த்தக வரிகளை நீக்குவார் என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ அமெரிக்காவின் மீதான சீனாவின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை நான் தடுத்து வருகிறேன். மேலும் அமெரிக்கர்களின் வேலைவாய்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சீனாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இதன் காரணமாக நமது விவசாயிகளுக்கு உதவ முடிந்தது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சினா மீதான வர்த்தக வரிகளை நீக்கி விடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1-ம் தேதி ட்ரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆனால், ட்ரம்ப்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேரிலாண்ட் மாகாணம் பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ட்ரம்ப் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்