ஜம்மு காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு: பாகிஸ்தான் யோசனைக்கு ஐ.நா. சபையில் இந்தியா கடும் எதிர்ப்பு

By பிடிஐ

ஜம்மு காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பாகிஸ்தான் யோசனைக்கு ஐ.நா.சபையில் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அம்மாநிலம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என உறுதிபட தெரிவித்துள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமை அலுவலகத்தில் 4-வது சர்வதேச நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உட்பட பல்வேறு நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் சபாநாயகர் (பொறுப்பு) முர்தசா ஜாவேத் அப்பாசி பேசும்போது, “ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் தங்கள் உரிமையை தீர்மானித்துக் கொள்வதற்கு ஏதுவாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு இதுதான் ஏற்ற தருணம்” என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சுமித்ரா மகாஜன் பேசும்போது, “இங்கு நடைபெறுவது பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு. 2030-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிப்பதற்குதான் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இங்கு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பக் கூடாது. சுதந்திரத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் இந்தியா வின் ஒருங்கிணைந்த பகுதி யாக விளங்குகிறது. இந்த மாநிலத் தில் ஜனநாயக ரீதியாக தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் கூட அதிக அளவில் வாக்குகள் பதிவானது. இதற்கு மேல் வேறு என்ன ஜனநாயகம் வேண்டும். பாகிஸ்தான் கோருவது போன்ற பொது வாக்கெடுப்பு தேவையற்றது” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

ஓடிடி களம்

21 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்