சுற்றுலாப் பயணிகளுக்கான விசா அடுத்த ஆண்டு வழங்கப்படும்: சவுதி

By செய்திப்பிரிவு

சுற்றுலாப் பயணிகளுக்கான விசா அடுத்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி சுற்றுலாத் துறை தரப்பில், “கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் சீராக வேண்டும். மேலும், கரோனா தடுப்பு மருந்து தொடர்பான நேர்மறையான செய்திகள் கிடைத்தால் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் கரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அனைத்துவழிப் போக்குவரத்தும் சவுதியில் அனுமதிக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சவுதி அரசு வலியுறுத்தியுள்ளது.

சவுதியில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்