ஈரானுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளுக்கு அமெரிக்காதான் காரணம்: ஹசன் ரவ்ஹானி

By செய்திப்பிரிவு

ஈரானுக்கு எதிரான குற்றங்களுக்கும், விரோத நடவடிக்கைகளுக்கும் அமெரிக்காதான் காரணம் என்று ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேசியத் தொலைக்காட்சியில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “அமெரிக்காவின் சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்ற பொருளாதாரத் தடைகள், பயங்கரவாத நடவடிக்கைகளால் மருந்து மற்றும் உணவு நம் நாட்டிற்குள் நுழைவது நிறுத்தப்பட்டது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான மக்களை வெள்ளை மாளிகையில் இதற்கு முன் நாங்கள் பார்த்ததில்லை.

அவர்கள் மிக மோசமான அட்டூழியங்களைச் செய்கிறார்கள். ஈரானுக்கு எதிரான குற்றங்களுக்கும், விரோத நடவடிக்கைகளுக்கும் அமெரிக்காதான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே 2018 ஆம் ஆண்டு முதல் மீண்டும் போர்ச் சூழல் மூண்டுவந்த நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.

அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 78 ஆண்டுகளில் நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும். இந்நிலையில், இவ்விரு நாடுகள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

46 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்