கரோனா: இங்கிலாந்தில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 13,000 டாலர் அபராதம்

By செய்திப்பிரிவு

இங்கிலாந்தில் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சுமார் 13,000 டாலர்வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “பிரிட்டன் இவ்வாரம் கரோனா பரவலின் இரண்டாம் கட்டத்தை எதிர் கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே கரோனா பரவலை தடுப்பதற்கு சரியான வழி விதிமுறைகளை கடைபிடிப்பதுதான். எனவே இங்கிலாந்து முழுவதும் கரோனா பரவலை தடுப்பதற்கு புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. எனவே தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 13,000 டாலர்வரை அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது.

இந்த நிலையில் பிரிட்டனில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்