பெண்களுக்கான ஐ.நா. அமைப்பில் இந்தியா வெற்றி; சீனா தோல்வி

By செய்திப்பிரிவு

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (இசிஓஎஸ்ஓசி) கீழ், பெண்களுக்கான பாலின சம உரிமை, அதிகாரம் போன்ற விவகாரங்களை கவனிக்கும் ‘யுஎன் கமிஷன் ஆன் ஸ்டேடஸ் ஆப் உமன்’ (சிஎஸ்டபிள்யூ) செயல்படுகிறது.

இந்நிலையில், இசிஓஎஸ்ஓசி.யின் 2021-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 2 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த அமைப்பில் உறுப்பினராக ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய 3 நாடுகள் போட்டியிட்டன. இசிஓஎஸ்ஓசி அமைப்பில் 54 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்தத் தேர்தலில் 54 நாட்டின் உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

ஆப்கானிஸ்தான் 39 வாக்குகள், இந்தியா 38 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றன. இதன்மூலம் இந்த அமைப்பில் 2 நாடுகளும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக உள்ள சீனாவுக்கு 27 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. தேர்தலில் வெற்றி பெற்ற ஆப்கன் மற்றும் இந்தியா வரும் 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை உறுப்பினர்களாக செயல்படும்.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ஆண் - பெண் பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பால் இந்த தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவை தேர்ந்தெடுத்த உறுப்பினர் நாடுகளுக்கு நன்றி ’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 mins ago

தமிழகம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்