சீனாவின் கரோனா தடுப்பு மருந்து நவம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும்

By செய்திப்பிரிவு

சீனா தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி மருந்துகள் நவம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன நோய்க் கட்டுப்பாட்டு மையம் தரப்பில், “மருத்துவப் பரிசோதனைகளின் இறுதிக் கட்டத்தில் சீனாவில் நான்கு கோவிட் -19 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறைந்தது மூன்று தடுப்பூசிகள், ஏற்கெனவே ஜூலை மாதம் தொடங்கப்பட்ட அவசரகாலப் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதலில் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிலையில் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு மட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளன.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 2.9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் கரோனா விவகாரத்தில் வெளிப்படையாகவே நடந்து கொள்வதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில் கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டது என்று சீனாவைச் சேர்ந்த நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் லி மெங் சமீபத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்