சீனாவில் புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

சீனாவில் புதிதாக 25 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ சீனாவில் புதிதாக 25 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 9 பேர் ஷின்ஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர்கள். மேலும் 20 பேருக்கு எந்தவித அறிகுறி இல்லாமால் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 84,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,634 பேர் பலியாகினர்.

கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த் தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த மாதம் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷின்ஜியாங் மாகாணத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் சீனாவின் வூஹான் நகரில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் 90% பேர் நுரையீரல் பாதிப்பைச் சந்திக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 min ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

48 mins ago

சினிமா

7 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

ஜோதிடம்

17 mins ago

மேலும்