ஈரானில் கரோனா இறப்பு அரசு கூறுவதைவிட மும்மடங்கு இருக்கும்: விசாரணையில் தகவல்

By செய்திப்பிரிவு

ஈரானில் கரோனா வைரஸால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அந்நாட்டு அரசு கூறுவதைவிட மூன்று மடங்கு அதிகம் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் அரசு கரோனாவினால் ஏற்பட்ட இறப்பை குறைத்துக் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பிபிசி செய்தி நிறுவனம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டது.

இதுகுறித்து பிபிசி வெளியிட்ட செய்தியில், “ ஈரான் அரசின் அறிக்கைபடி 14,405 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஈரானில் ஜூலை 20 -ம் தேதி வரை 42,000 பேர் கரோனாவால் இறந்திருக்கக் கூடும் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கரோனாவால் அதிக அளவில் ஈரானும், சவுதியும் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்