வியட்நாமில் கரோனாவுக்கு முதல் பலி

By செய்திப்பிரிவு

வியட்நாமில் முதல் முறையாக கரோனாவுக்கு ஒருவர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து வியட்நாம் அரசு ஊடகம் தரப்பில், “வியட்நாமின் மத்தியப் பகுதியான ஹோய் நானில் 70 வயதுடைய நபர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வியட்நாமில் ஏற்பட்ட முதல் மரணம் இதுவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் பிரதமர் நேயென் ஜுவான் கூறுகையில், “டா மாங் பகுதியில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கரோனா தொற்று ஏற்படலாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் கரோனா பரவலின் தீவிர தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 9 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட வியட்நாம், கரோனாவைக் கட்டுப்படுத்தி முன் உதாரணமாக இருந்தது

அது மட்டுமல்லாது வியட்நாமில் யாரும் சமூகத் தொற்றால் பாதிக்கப்படாமல் இருந்தனர். மேலும் கரோனாவால் எந்த உயிரிழப்பும் நிகழாமல் இருந்தது. இந்த நிலையில் 99 நாட்களுக்குப் பிறகு வியட்நாமில் மீண்டும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், 48 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் 6 பகுதிகளில் கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

தமிழகம்

1 min ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

48 mins ago

வாழ்வியல்

39 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்