அமெரிக்காவில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் பாதிக்கப்படுவது அதிகரிப்பு: மருத்துவர்கள் அதிர்ச்சி 

By ஏஎன்ஐ

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அமெரிக்காவில் 39 லட்சத்தைத் தாண்டிய நிலையில் கோவிட்-19-லிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் கரோனாவினால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டன்போஸ்ட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குணமடைந்தவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் வாக்சின் முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடும். அல்லது மக்கள் தொகையில் பெரிய அளவில் தொற்று ஏற்பட்டு ஹெர்டு இம்யூனிட்டி ஏற்படுவதும் கடினமாகி விடும்.

முதன் முதலில் வைரஸ் தாக்குதல் ஆரம்பித்த பிறகு மக்கள் எப்படி நோய் எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதைக் கண்டுப்பிடிக்கும் முடிந்த முடிவுகள் எதுவும் இல்லை. மேலும் இது எத்தனை நாட்கள் நீடிக்கும் சிலருக்கு இதன் தாக்கம் ஏன் அதிகமாக இருக்கிறது, அல்லது ஏன் தாக்கம் அதிகமாக இல்லை என்பதைப் பற்றி முடிவுகள் தெளிவாக இல்லை, என்று கொலம்பைய பல்கலைக் கழக தொற்று நோய் நிபுணர் டாக்டர் கிரிஃபின் என்பவர் தெரிவித்துள்ளார்.

சிற்றம்மை தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டு அதை ஒழித்து விட்டோம் என்று நாம் கூறினாலும் மீண்டும் சிற்றம்மை வைரஸ் தாக்கம் இருக்கவே செய்கிறது, எனவே மீண்டும் தொற்று பீடிப்பதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை, ஆனால் நாவல் கொரோனா வைரஸைப் பொறுத்தவரையில் மீண்டும் குணமடைந்தவர்கள் இதனால் நோய்வாய்ப்படுவார்கள் என்பதை கோட்பாட்டளவிலான சாத்தியம் என்று வைத்துக் கொள்ளலாம், என்று மொனிகா காந்தி என்ற மருத்துவ நிபுணர் கூறுகிறார்.

ஆனாலும் மீண்டும் தொற்று பீடிப்பதற்கான சாத்தியம் இல்லை என்று நிச்சயமாகக் கூற முடியாது என்கிறார் அவர்.

இந்நிலையில் சுமார் 6 லட்சம் உயிர்களை கரோனா பலிவாங்கிய நிலையில் வாக்சின் கண்டுப்பிடித்து அதை திறம்பட பயன்படுத்துவதும் கேள்விக்குறியாகியுள்ளது.

“மீண்டும் நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்ப்பு இருக்கிறது என்றால், மீண்டும் மீண்டும் வாக்சின் அளிக்கப்பட்டு கொண்டேதான் இருக்க வேண்டும்” என்று லெனாக்ஸ் ஹில் மருத்துவமனையின் இணைப் பேராசிரியர் ராபர்ட் கிளாட்டர் என்பார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

ஜோதிடம்

9 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்