டோக்கியோவில் கரோனா தொற்று 10,000-ஐ தாண்டியது

By செய்திப்பிரிவு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் புதிதாக 200 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டோக்கியோவில் இதுவரை 10,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜப்பான் அரசுத் தரப்பில், “தலைநகர் டோக்கியோவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒசாகாவில் 120 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டோக்கியோவில் இதுவரை 10,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் முப்பது வயதுக்கும் குறைவானவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோவில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அங்கு சில நாட்களுக்கு முன்னர் ரெட் அலர்ட் (அவசர நிலை) விடுக்கப்பட்டது.

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு டோக்கியோ வாசிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் உள்ள நாடக அரங்கு ஒன்றில் நாடக உறுப்பினர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நாடக அரங்கில் சமீபநாட்களில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் அனைவரையும் பரிசோதனை செய்யும் முயற்சியில் அரசு இறங்கியது

ஜப்பானில் 25,736 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 988 பேர் பலியாகியுள்ளனர்.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகம் இல்லையென்றாலும், தற்போது புதிதாகத் தொற்று ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில், ஜப்பான் அரசு தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்