கரோனா தொற்று: ஹாங்காங்கில் மூடப்படும் பள்ளிகள்

By செய்திப்பிரிவு

ஹாங்காங்கில் கரோனா மீண்டும் பரவ தொடங்கியதைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள் திங்கட்கிழமை முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் இரண்டாவது நாளாக கரோனா பாதிப்பு இரட்டை இலக்க எண்ணிக்கையை தொட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ ஹாங்காங்கில் கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு கரோனா உறுதிப்பட்டது. இதில் 34 பேருக்கு உள்ளூரிலேயே தொற்ரு ஏற்பட்டுள்ளது.அதுவும் சமீபத்தில் கரோனா பாதித்தவர்களில் பெரும்பாலனவர்கள் மாணவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஹாங்காங்கில் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் மூடப்படும் என்று கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் இதுவரை 1,366 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன.

இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்