ஈரானில் கரோனா பலி 11,000-ஐ கடந்தது

By செய்திப்பிரிவு

ஈரானில் கரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 11,000-ஐ கடந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ ஈரானில் கடந்த 24 மணி நேரத்துல் 148 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11,000 -ஐ கடந்துள்ளது. மேலும் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

ஈரானில் கரோனா தொற்றால் இதுவரை 2,32,863 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஈரானின் எல்லையோர நகரங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஈரானில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப மாதங்களில் இந்த நகரங்களில் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை.

தற்போதுதான் தொற்று அதிகரித்து வருகிறது என்று ஈரான் அரசு முன்னரே தெரிவித்து இருந்தது.இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தின் மத்தியில் ஊரடங்குக் கட்டுப்பாட்டை ஈரான் அரசு தளர்த்தியது. அதைத் தொடர்ந்து திருமண நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் மக்கள் கூட்டமாகப் பங்கேற்கத் தொடங்கினர். இந்நிலையில் தற்போது அத்தகைய கூட்டங்களில் கலந்து கொண்டவர்களிடையே தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஈரான் தலைநகரில் மட்டும் 20 சதவீதம் பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஈரான் கரோனா தடுப்புப் பணிக்குழுவின் தலைவர் அலிரேஸா சாலி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

13 hours ago

மேலும்