கரோனா தொற்று: அமேசான் பழங்குடிகளைக் காக்கும் நடவடிக்கையில் ராணுவம்

By செய்திப்பிரிவு

பிரேசிலில் அமேசான் பழங்குடி மக்களைக் கரோனா தொற்றிலிருந்து காக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.

பிரேசிலில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 14,08,485 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 59,656 பேர் பலியாகி உள்ளனர். 7,90,040 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமேசான் பழங்குடிகளுக்கு மருந்துகளைச் சேர்க்கும் முயற்சியில் பிரேசில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

பழங்குடிகள் எவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் கரோனா வைரஸ் உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பழங்குடிகளுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் பிரேசில் ராணுவம் இறங்கியுள்ளது என்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துகள் ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லும் முயற்சியில் பிரேசில் ராணுவம் ஈடுபட்டுள்ளது என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அருகிலுள்ள கிராமங்களிலும் கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் பிரேசில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

உலக அளவில் கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது.

கரோனா விவகாரத்தை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா சரியாகக் கையாளவில்லை என்று சர்வதேச அளவில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஆறு மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்