கரோனா தொற்று அதிகரிக்கிறது; இறப்பு இல்லை - ஸ்பெயின்

By செய்திப்பிரிவு

ஸ்பெயினில் கரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்த நிலையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஸ்பெயினில் சில நாட்களாக கரோனா இறப்பு எற்படவில்லை. எனினும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 167 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஸ்பெயினில் 2,42,280 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 27,136 பேர் பலியாகி உள்ளனர். 1,50,000 பேர் குணமடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் ஜூன் மாத இறுதி வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் ஸ்பெயினில் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஊரடங்கு மே 4 ஆம் தேதி தளர்த்தப்பட்டது.

முதல் கட்டமாக சிகை அலங்காரக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் திறக்க கடந்த மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்