கரோனா பலி எண்ணிக்கையை மறைக்கிறதா பிரேசில்?

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த விவரங்களை பிரேசில் அரசு முன்னுக்குப் பின் முரணாகப் பதிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரோனா தொற்றின் புதிய மையமாக பிரேசில் மாறியுள்ளது. நாளுக்கு நாள் நோய்த் தொற்றின் எண்ணிக்கையும், இறப்பும் அதிகரித்து வருகின்றன. இதுவரை பிரேசிலில் சுமார் 7,10,887 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,312 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று பிரேசிலில் கரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை மறைக்கும் விதமாக முன்னுக்குப் பின் முரணாக அரசு இணையதளத்தில் பிரேசில் அரசு பதிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் நாடாளுமன்றத்தின் கீழ் அவைத் தலைவர் ரோடிரிக்கோ கூறும்போது, ''கரோனா வைரஸால் ஏற்படும் இறப்பு எண்களை மாற்றுவதன் மூலம் சூரியனை சல்லடை கொண்டு அரசு மூடுகிறது. புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையை அவசரமாக மீட்டெடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் இதுவரை 72,00,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

கருத்துப் பேழை

29 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

13 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்