இலங்கையில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

இலங்கையில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை போக்குவரத்துத் துறை அமைச்சகம் தரப்பில், “இலங்கையில் கரோனா தொற்று இரு மாதங்களுக்குப் பிறகு கட்டுக்குள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தலைநகர் கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே பயணிகள் பேருந்துகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பயணிகள் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகலைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுமார் 1,800 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 990 பேர் குணமடைந்துள்ளனர். 11 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்