ஒரே நாளில் 1,500 மேற்பட்டோர் பலி: பிரேசிலில் கரோனாவால் உயிரிழப்பு 26,754 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பிரேசிலில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 26,725 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதார அமைச்சகம் கூறும்போது, “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,156 பேர் கரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரேசிலில் கரோனாவால் 4,38,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 81 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பிரேசிலில் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்த சூழலில் பிரேசிலுக்கு அமெரிக்க மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என பயணத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது.

கரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அலட்சியமாக நடந்து வருவதாக உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கரோனா நடவடிக்கை தொடர்பாக பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கும் அந்நாட்டு சுகாதாரத்துறை நிபுணர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. கரோனா நடவடிக்கை தொடர்பாக போல்சனாரோவின் கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவித்ததால், சுகாதரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட நெல்சன் டீச்சும்முன் பதவி விலகினார்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா தொற்று ஜூன் மாதம் மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

48 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்