சீனாவின் இயலாமைதான் உலக அளவில் மரணங்களுக்குக் காரணம்: ட்ரம்ப் விமர்சனம்

By செய்திப்பிரிவு

கரோனா விவகாரத்தில் சீனாவின் இயலாமைதான் உலகளாவிய பெரும் மரணங்களுக்குக் காரணமாகியுள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து தோன்றிய கரோனா வைரஸ் 180க்கும் அதிகமான நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அமெரிக்கா கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 15,73,600 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 93,697 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சீனாவை அதிபர் ட்ரம்ப் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இதுவேறொன்றும் இல்லை. சீனாவின் இயலாமையினால் உலக அளவில் இந்த பெரும் மரணங்கள் நிகழ்ந்துள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் சீனாவின் ஊதுகுழலாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருகிறது என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தி இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்