மீண்டும் பரவும் கரோனா தொற்று: வூஹானில் மருத்துவப் பரிசோதனை தொடங்கியது

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று முதலில் ஏற்பட்ட சீனாவின் வூஹான் நகரில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் அனைவரையும் பரிசோதிக்கும் முயற்சியில் அந்நகர அரசு இறங்கியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்நகரில் உள்ள 1 கோடி மக்களையும் அடுத்த 10 தினங்களுக்குள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த அரசு திட்டமிட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) வூஹானில் உள்ள மக்கள் வரிசையாக நின்று பரிசோதனை செய்து கொண்டனர். மக்கள் அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மருத்துவப் பரிசோதனை குறித்து வூஹான் வாசி ஒருவர் கூறும்போது, ''இந்த சோதனைகள் மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தொற்று ஏற்படாமல் இருக்க இந்த சோதனைகள் அவசியம்'' என்றார்.

முதன்முதலாக கரோனா தொற்று சீனாவில் உள்ள வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உறுதி செய்யப்பட்டது. சில நாட்களிலே கரோனா தொற்று மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. பரவலைக் கட்டுப்படுத்த வூஹான் முழுமையாக முடக்கப்பட்டது. பின்னர் வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து 76 தினங்களுக்குப்பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

சீனாவில் கரோனா தொற்றுக்கு 85,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,753 பேர் பலியாகினர். 30,258 பேர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 secs ago

தமிழகம்

3 mins ago

சினிமா

10 mins ago

விளையாட்டு

33 mins ago

வணிகம்

45 mins ago

இந்தியா

47 mins ago

சினிமா

53 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்