கரோனா மையமான வூஹானில் 73 நாட்களுக்குப் பிறகு லாக்-டவுன் முற்றிலும் நீக்கம்: புல்லட் ரயில்கள் அனைத்திற்கும் கிருமி நாசினி தெளிப்பு

By பிடிஐ

1,000 பேருக்கு புதிதாகக் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையிலும் 2 பேர் மரணமடைந்துள்ள நிலையிலும் கரோனா மையமாகத் திகழ்ந்ந்த சீனாவின் வூஹான் நகர் மீதான 73 நாட்கள் லாக்-டவுன் நீக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

62 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் இதில் 59 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். இதனையடுத்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை அங்கு 1042 ஆக அதிகரித்துள்ளது.

உள்நாட்டு கேஸ்கள் இல்லாத நிலையில் நேற்று 3 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஷாண்டோங் மாகாணத்தில் இருவருக்கும் குவாங்டோங் மாகாணத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இது தவிர 1095 பேர் கண்காணிப்பில் உள்ளனர். நோய்க்குறிகுணங்கள் இல்லாதவர்கள் (Asymptomatic coronavirus cases) என்றால் கரோனா பாசிட்டிவ் என்று சோதனையில் தெரியவந்து ஆனால் கரோனாவுக்கான நோய் அறிகுறிகள் தென் படாதவர்கள். இவர்கள் மூலம் பரவும் அபாயம் அதிகம் என்பதால் இவர்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய 2 மரணங்களையும் சேர்த்து சீனாவில் பலி எண்ணிக்கை 3,333 ஆக அதிகரித்துள்ளது

சீனாவில் மொத்தம் உறுதி செய்யப்பட்ட கரோனா எண்ணிக்கை இன்னமும் கூட 81,802 ஆக உள்ளது, 77,279 நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 1 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட வூஹானில் 73 நாட்கள் லாக்டவுன் நீக்கப்பட்டது. ஹூபேயில் புதிய கரோனா தொற்று ஏற்படவில்லை.

ஆனாலும் அதற்குள் நாம் நம் பாதுகாப்பு அரண்களைக் கடந்து முழுதுமாக அடைப்பிலிருந்து விடுபடுதல் கூடாது என்று தொற்று நோய் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ஏனெனில் பாசிட்டிவ் என்று தெரிந்து இன்னும் நோய்க்குறிகுணங்கள் தென்படாதவர்கள் இருப்பதால் அவர்கள் மூலம் இரண்டாம் அலைப் பரவலுக்க்கு வித்திட்டு விடக்கூடாது என்று அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

லாக்-டவும் அகற்றப்பட்ட உடனேயே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு நடமாடத் தொடங்கினர். ஹைவே சுங்கச்சாவடிகளில் கார்கள் வரிசை கட்டி நிற்கத் தொடங்கியுள்ளன. வூஹானிலிருந்து வெளியே வேலைக்குச் செல்பவர்கள் ரயில் நிலையங்களில் வரிசை கட்டி நிற்கின்றனர்

வூஹான் ரயில்களில் சுமார் 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்று பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வூஹானிலிருந்து ஷாங்காய்க்கு 270 பயணிகள் ரயில் இயங்கத் தொடங்கின.

ரயில் நிலையங்களில் நுழையும் போதே பயணிகள் சுகாதார குறிகள் ஸ்கேன் செய்யப்படுகிறது, உடல் உஷ்ணம் பரிசோதிக்கப்படுகிறது. முகக்கவசம் அவசியம்.

புல்லட் ரயில்கள் அனைத்திற்கும் கிருமி நாசினி குளியல் நடந்துள்ளது. பிளாட்பாரம் மற்றும் மக்கள் காத்திருப்பு ஹால்கள் அனைத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்