ஜப்பானில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் அவசரநிலை பிரகடனம்

By செய்திப்பிரிவு

ஜப்பானில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ, ஒசாக உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவை விடவும், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளபோதிலும் வேகமாக பரவி வரும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இதனால் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்பை அடைந்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட 73 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பான் வருவதற்கு அந்நாட்டு அரசு ஏற்கெனவே தடை விதித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு வருடத்துக்கு ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் 12.6 பில்லியன் டாலர்கள் செலவு செய்திருந்தது.

ஜப்பானில் கரோனா வைரஸுக்கு இதுவரை 3902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக தலைநகர் டோக்கியோவில் 1000 பேருக்கும் அதிகமாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ, ஒசாகா உட்பட 5 முக்கிய நகரங்களில் அவசர நிலையை பிரகடனம் செய்து அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

29 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

57 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

55 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்