கரோனா வைரஸ் பாதிப்பு: கனடாவில் நாடாளுமன்றக் கூட்டங்கள் ரத்து

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, கனடாவில் நாடாளுமன்றக் கூட்டங்கள் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி ட்ரூடோவுக்கு கோவிட்-19 காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக பிரதமர் அலுவலகத்துக்கு ஐஸ்டின் செல்ல மாட்டார் என்றும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவார் என்றும் கனடா அரசு அறிவித்துள்ளது.

கனடாவில் கோவிட்-19 காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில், நாடாளுமன்றக் கூட்டங்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் இந்தத் தடை நீட்டிக்கப்படலாம் என்று நாடாளுமன்றத் தலைவர் பப்லோ ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிட் - 19 காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் கனடா அரசு இறங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

35 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்