ஆப்கானிஸ்தானில் 1,500 தலிபான்கள் விடுவிப்புக்கான ஆணை: அஷ்ரப் கானி கையெழுத்திட்டார்

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் நடைபெறும் 18 ஆண்டு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஆப்கானிஸ்தான் அரசு இறங்கியுள்ளது.

அதன்படி, சிறையில் உள்ள தலிபான்கள் 1,500 பேரை விடுவிக்கும் ஆணையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி கையெழுத்திட்டார். மேலும், விடுவிக்கப்பட்ட தலிபான்கள் அனைவரும் இனி களத்தில் சண்டையிட மாட்டோம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை சமீபத்தில் தோஹாவில் கையொப்பமானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த 18 ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைப் பிரிவுகளை முழுமையாக விலக்கிக் கொள்ளும். இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை அமெரிக்கா விலக்கிக் கொண்டு வருகிறது.

கடந்த 18 ஆண்டுகாலப் போருக்காக இதுவரை அமெரிக்கா ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

மேலும்