ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி

By செய்திப்பிரிவு

ஜெர்மனியில் நடந்த இரு துப்பாக்கிச் சூடு சம்பங்களில் 8 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஜெர்மனி போலீஸ் அதிகாரிகள் தரப்பில், ''ஜெர்மனியின் ஹனாவ் நகரில் புதன்கிழமை இரவு இரு மதுபானக் கூடங்களில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 8 பேர் பலியாயினர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் இறங்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட முக்கிய நபர், அவர் இல்லத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்றும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் ஜெர்மன் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்தவர்கள் அது ஒரு துயரமான சம்பவம் என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியின் முக்கிய நகரில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தவறவீடாதீர்கள்

கரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பலில் இரு பயணிகள் உயிரிழப்பு

சீனாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்கள்: மீட்டுவர விமான செலவுக்கு தவிக்கும் இம்ரான் கான்; மக்கள் போராட்டம்

'இந்தியன் 2' விபத்து: மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்; கமல் வருத்தம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்