நான் அதிபராக இருக்கும்வரை ரஷ்யாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் சட்டபூர்வமாகாது: புதின்

By செய்திப்பிரிவு

நான் ரஷ்யாவின் அதிபராக இருக்கும்வரை தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டபூர்வமாக்க மாட்டேன் என்று புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினின் பத்து வருட ஆட்சிக் காலத்தில், தன்னைப் பாரம்பரியமான செயல்பாடுகளில் இணைத்துக்கொண்டார். மேற்கத்திய கலாச்சாரங்களிலிருந்து ரஷ்யாவைப் பிரிக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் குறித்த தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து புதின் கூறும்போது, “தாய், தந்தை என அழைக்கப்படும் பாரம்பரிய முறை, பெற்றோர் 1, பெற்றோர் 2 என்று அழைக்கப்படுவதன் மூலம் திசை திருப்பப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன்.

நான் இது தொடர்பாக ஏற்கெனவே கருத்து தெரிவித்திருக்கிறேன். எனினும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் குறித்த எனது நிலைப்பாட்டை மீண்டும் விளக்குகிறேன்.

நான் ரஷ்யாவின் அதிபராக இருக்கும்வரை இங்கு தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் நடைபெறுவதை சட்டபூர்வமாக்கமாட்டேன்” என்று தெரிவித்தார்.

தவறவீடாதீர்

நிகழ் பதிவு: தமிழக பட்ஜெட் 2020; 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு

அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

ஐபிஎல் 2020: 'எங்கிட்டகூட சொல்லவில்லையே'-கோலி : 'புதிய லோகோ'வை வெளியிட்ட ஆர்சிபி அணி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

40 mins ago

சினிமா

57 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்