அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு
Updated on
1 min read

அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும் என ஓபிஎஸ் அறிவித்தார்.

தமிழக அரசுப் பேருந்துகள் நவீனமாகி வருகின்றன. அரசுப் பேருந்துகள் ஏசி பேருந்துகள், மின்சாரப்பேருந்துகளாக மாற்றப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் மின்சாரப் பேருந்து வசதி தொடங்கப்பட்டது. அதில் குளிர்சாதன வசதி, சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி, பேருந்து நிறுத்தத்தை ஒலிப்பெருக்கி மூலம் சொல்லும் வசதி ஆகியவை இடம்பெற்றிருந்தன.

போக்குவரத்துக் கழக நிதி நெருக்கடி, டீசல் விலை ஏற்றம் ஆகிய சிக்கலில் இருந்து மீள மின்சாரப் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. எரிபொருள் பேருந்துகளை இயக்க ஆகும் செலவு, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருதியும் மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது .

இதுதவிர பயணிகள் , ஊழியர்கள் பாதுகாப்பு, குற்றச் சம்பவங்களைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் 'அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அறிவித்தார்.

நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். 525 மின்சாரப் பேருந்துகள் வாங்க 960 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அரசுப் பேருந்துகளில் மின்னனு பயணச் சீட்டு முறை கொண்டுவரப்படும். பணமில்லாப் பரிவர்த்தனையில் பயணச்சீட்டு பெறும் முறை அமல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in